மட்டக்களப்பில் மின்னல் தாக்கி விவசாயி பலி
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று வியாழக்கிழமை (07.11.2024) மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
குறித்த நபர் சம்பவதினத்தன்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போது, அந்த பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானுக்கு இறுகும் நெருக்கடி... மத்திய கிழக்கில் போருக்குத் தயாராகும் அமெரிக்க விமானப்படை News Lankasri
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam