சீனா - இலங்கை இடையிலான 13ஆவது இராஜதந்திர சுற்று பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்
சீனாவின் தலைநகரில் இடம்பெறும் 13ஆவது இராஜதந்திர சுற்று ஆலோசனை மாநாட்டின் இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன( Aruni Wijewardana )தலைமை தாங்கவுள்ளார்.
பீய்ஜிங்கில் இன்று நடைபெறும் சீனாவுடனான ஆலோசனை மாநாட்டில் சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்டாங் (Sun Weidong) தலைமையிலான குழுவுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இன்றைய அமர்வின்போது ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருதரப்பு அரசியல் கலந்தாய்வு
இலங்கையின் தூதுக்குழுவில் பீய்ஜிங்கின் இலங்கை தூதுவர் மகிந்த ஜெயசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளின் 12ஆவது சுற்று 2023 மே 30ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |