பாபா வங்காவின் கணிப்பின்படி சில மாதங்களில் தொடங்குமா 3ஆம் உலகப்போர்..!
மூன்றாம் உலகப்போர் தொடர்பில் பாபா வங்கா (Baba Vanga), மேற்கொண்டிருந்த கணிப்பொன்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருவதுடன் பலர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போல்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பார்வையிழந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா, தான் 1996ஆம் ஆண்டு மரணமடையும் முன்பே, சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என கணித்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில், சிரியா நாட்டின் கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர்.
சிரியாவின் வீழ்ச்சி
மேலும், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை நோக்கி அவர்கள் முன்னேறி வருவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இது பாபா வங்காவின் மூன்றாம் உலகப்போர் தொடர்பிலான கணிப்பு தொடங்கும் கட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அத்துடன், சிரியா முழுமையாக வீழச்சியடையும் பட்சத்தில், உடனடியாக மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், இளவேனிற்காலத்தில், கிழக்கில் ஒரு போர் தொடங்கும். அதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகும், கிழக்கில் நடக்கும் போர், மேற்கை அழிக்கும் பாபா வங்கா என்று கூறியுள்ளார்.
அதேவேளை, சிரியா, வெற்றி பெற்றவரின் காலில் விழும், ஆனால், வெற்றி பெற்றவர் அவராக இருக்கமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், அதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
இருப்பினும், பாபா வங்காவின் கணிப்பின்படி, சிரியா கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததும், மூன்றாம் உலகப்போர் தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதி என பாபா வங்காவை பின்பற்றுவோர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.