பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை முடிவடையும் மற்றும் மூன்றாம் தவணை தொடங்கும் திகதிகள் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் (24) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் இரத்தக்கறையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம்! சீன நாட்டவர் படுகொலையில் புதிய திருப்பம்
மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம்
அதன்படி சிங்கள மற்றும் தமிழ் வழி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதேபோல், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் கல்வியாண்டு ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று முடிவடையும் என்றும், மூன்றாம் கல்வியாண்டின் (முதலாம் கட்டம்) ஆகஸ்ட் 03, திங்கட்கிழமை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலும் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் குறிப்பிட்ட திகதிகளிலிருந்து செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam