இலங்கை மக்களை வதைக்கும் பொருளாதார சுமை! உதவ தயார் என கனேடிய பிரதமர் அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Justin Trudeau Sri Lanka Violence 2022 Canada
By Benat Jul 24, 2022 06:24 PM GMT
Report

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை 39ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலை என்னும் கொடிய நிகழ்வு..

குறித்த அறிக்கையில் மேலும்,

நாடு முழுவதும் பல தசாப்தங்களாக நீடித்த அமைதியின்மை மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் தமிழர் படுகொலைகள் இடம்பெற்றன.

இலங்கை மக்களை வதைக்கும் பொருளாதார சுமை! உதவ தயார் என கனேடிய பிரதமர் அறிவிப்பு | 39Th Anniversary Of Black July

கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் இந்த கொடிய நிகழ்வுகள் 26 ஆண்டுகள் நீடித்த ஆயுத மோதலைத் தூண்டியது. இது பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் காரணமானது. தமிழர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அழிக்கப்பட்டன.

இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர். கருப்பு ஜூலை வன்முறைகளைத் தொடர்ந்து வந்த மாதங்களில் இலங்கையில் நடந்த வன்முறைகளுக்கு பதிலளிக்க கனடா அரசாங்கம் ஒரு சிறப்பு நடவடிக்கையை செயற்படுத்தியது. இது 1,800 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கனடாவில் குடியேற உதவியது.

கறுப்பு ஜூலை கொடூரங்களில் இருந்து தப்பிய பல தமிழ் கனேடிய மக்களை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர்களின் இழப்பு, இடப்பெயர்வு மற்றும் பின்னடைவு போன்ற வேதனையான அனுபவங்களால் நெகிழ்ந்து போனேன். கனடா இப்போது உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடங்களில் ஒன்றாக உள்ளது.

இலங்கையர்களுக்கு உதவ தயாராகும் கனடா 

கனடாவை இன்று வலுவான, துடிப்பான மற்றும் பல்கலாசார நாடாக மாற்றுவதற்கு பெருமளவில் பங்களித்ததற்காக தமிழ் கனேடியர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ கனடா தயாராக உள்ளது.

இலங்கை மக்களை வதைக்கும் பொருளாதார சுமை! உதவ தயார் என கனேடிய பிரதமர் அறிவிப்பு | 39Th Anniversary Of Black July

இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கும் இலங்கை அரசாங்கத்தையும் இலங்கை நாடாளுமன்றத்தால் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் கனடா வலுவாக ஊக்குவிக்கிறது.

இந்த இக்கட்டான காலங்களில் போராட்டக்காரர்களின் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கனடா மீண்டும் வலியுறுத்துகிறது.

கறுப்பு ஜூலை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன. அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US