திருகோணமலையில் கருப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை படுகொலை நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் 38வது கருப்பு ஜூலை , வெலிக்கடை படுகொலை நினைவும் இன்று பகல் திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கின் முன்னால் சுடரேற்றி அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் ( ஜனா) தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் வினோராதலிங்கம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதி தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, கட்சியின் இளைஞரணி உபதலைவர் இரத்தின ஐயா வேணுராஜ் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் தடையை மீறி இந்த நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri