யாழில் சீரற்ற காலநிலையால் 121 குடும்பங்கள் பாதிப்பு
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 121 குடும்பங்களைச் சேர்ந்த 380 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு சீரற்ற காலநிலையால் 7 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொடிகாமம் வடக்கு ஜே 326 கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட, சந்தை வீதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா உள்ளிட்டவர்கள் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள
ரி.என்.சூரியராஜா, வீதியில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றுவதற்கு
நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri