யாழில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களது 37வது ஆண்டு நினைவேந்தல்
இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது 37வது நினைவு தினம் இன்று (21) நினைவு கூரப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர்.
பொதுச்சுடர்
நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri