முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எடுபிடி வேலை பார்த்த பொலிஸார் - அநுர அரசு கோபம்
முன்னாள் ஜனாதிபதிகளின் மெய்ப்பாதுகாவலர்கள் பலர் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது பொலிஸ் அதிகாரிகளை அவமதிக்கும் செயலாகும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத், தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சில முன்னாள் ஜனாதிபதிகள் 163 மெய்ப்பாதுகாவலர்களை கோரியதாகவும், இதனை மக்களால் ஏற்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள்
அண்மையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக நடவடிக்கை
எங்களுக்கு அவர்கள் ஏ பிரிவா பீ பிரிவா என்பது முக்கியமில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாக தான் நடத்தப்படுவார்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
you may like this