வல்வைப் படுகொலை 37வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
வல்வைப் படுகொலை 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரில் தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த்தேசியப் பேரவை ஏற்பாட்டில் வல்வைப் படுகொலை 37ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது 72 பொது மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
படுகொலைசெய்யப்பட்ட 72 பொது மக்களினதும் நினைவேந்நல் நிகழ்வில், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஶ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட கட்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, பொதுச் சுடரேற்றப்பட்டுள்ளதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening