கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்து அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3776 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் (Rupavathi Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய மாவட்டத்தில் தடுப்பூசி போடுபவர்களுடைய கணக்கெடுப்பை செய்து வருகின்றோம். அக்கெணக்கெடுப்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி போடும் கணக்கெடுப்பை பார்க்கின்றபொழுது 3776 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது மிக வருத்ததிற்குரிய விடயம்.
அப்படி தடுப்பூசியை போடுகின்றவர்கள் தங்களை ஓரளவு தொற்றிலிருந்து பாதுகாக்கக்கூடியதாக இருக்கும். அதன் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அது உங்களிற்கும், உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களிற்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இந்த விடயத்தில் முதியோர் அமைப்புக்கள் மற்றும் முதியோர் கழகங்கள் விழிப்புடன் இருந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை ஊக்குவித்து அவர்களும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
எங்களுடைய சமூகம் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம். வறுமையிலே காணப்படும் மாவட்டமாக எமது மாவட்டம் இருக்கின்றது. இவ்வாறான தொற்றுக்களின் ஊடாகவும் எமது மாவட்டம் பாதிப்புக்குள்ளாகாதபடி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமானது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
