யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் தனிமைப்படுத்தலில்! மாவட்ட அரசாங்க அதிபர்
யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் இன்றைய நிலையில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 நபர்கள், சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
யாழில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பி உள்ளனர். யாழ். மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம் மேலும் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மேலும் யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில் சந்தை விடயம் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri