37 கிராம மக்கள் படுகொலை: நைஜீரியாவில் பயங்கரம்
நைஜீரியாவில் உள்ள போகோஹராம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் ஒன்றில் 37 கிராம மக்கள் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதலில் போகோஹராம் இயக்கத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தையடுத்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
கண்ணிவெடி தாக்குதல்
இதனையடுத்து கிராம மக்கள் பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டு அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா





இந்தியா மீதான ட்ரம்பின் கடும் கோபத்திற்கு உண்மையான காரணம்... ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அல்ல News Lankasri

உலகின் மிகப்பெரிய யுரேனிய உற்பத்தி நாட்டில் முதல் அணுமின் நிலையம்! பணியைத் தொடங்கிய ரஷ்யா News Lankasri
