இலங்கையில் காணப்படும் முதிர்ச்சியடைந்த 37 சந்தன மரங்கள்! அமைச்சர் தகவல்
இலங்கையின் முதிர்ச்சியடைந்த 37 சந்தன மரங்கள் (Pterocarpus santalinus) மாத்திரமே உள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் செயலணியுடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போது இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தன மரத்தை இலங்கையில் இலகுவாக நாட்ட முடியும். எனினும் நாட்டுவதற்கான சந்தன மரங்களை தேடிக்கொள்வதில் சிரமம் உள்ளமையால் அது இலங்கையில் அரிதாகியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது சிவப்பு மற்றும் வெள்ளை சந்தன மரங்கள் இல்லை. பெரும்பாலான சிவப்பு மற்றும் வெள்ளை சந்தன மரங்கள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
முதிர்ச்சிடைந்த சந்தன மரம் ஒன்றின் விலை 20 மில்லியன் ரூபாவாகும். சந்தன மரம் ஒன்று வரண்ட வலயப்பகுதியில் 8-12 அடி உயரத்துக்கு வளரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கலந்துரையாடலில் பங்கேற்ற ஆயுர்வேத வைத்தியர்கள், ஏற்கனவே நாடாளாவிய
ரீதியில் 4800 சந்தன மரககன்றுகள் நாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)