வாழைச்சேனையில் மூன்று நாட்களில் 37 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று 03ம் திகதி வரை 37 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் ,வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப்சஞ்ஜீவ் வழிகாட்டலில் இன்று புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் சுத்தப்படுத்தும் நிகழ்வு பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் 31ம் திகதி வரை 587 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ,இந்த வருடத்தின் முதல் மூன்று நாட்களுக்குள் மாத்திரம் 37 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்த நான்கு பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான் தெரிவித்துள்ளார்.




போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri