இலங்கையில் இதுவரை 37,825 பேருக்கு தடுப்பூசி! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
இலங்கையில் இதுவரை 37,800க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நேற்று முதல் மொத்தம் 37,825 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 7.45 மணி நிலவரப்படி 32,539 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நேற்று தொடங்கிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.
மொத்தம் 5,286 கொரோனா தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
எந்தவொரு பக்க விளைவுகளாலும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கொடையில் உள்ள ஐ.டி.எச் வைத்தியசாலையின் மூத்த வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தடுப்பூசி பெற்ற முதல் சுகாதார அதிகாரி ஆனார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற முன்னணி சுகாதார ஊழியர்கள், இராணுவம் மற்றும் காவல்துறை முன்னுரிமை பட்டியலில் உள்ளன.
இந்தியா பரிசளித்த கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சிறப்பு ஏர் இந்தியா விமானத்தில் நேற்று முன்தினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இந்திய அரசின் #VaccineMaitri திட்டத்தின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 500,000 டோஸ் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு பரிசளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
