மண்டைதீவு படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவு : கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்
1990களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று(26.08.2026) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஒருவரது தாயார்
தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவான ஸ்பன் மற்றில்டா முதன்மைச் சுடரேற்றிவைத்து நினைவு நினைவு கூரலை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து அருட்தந்தை வசந்தன் மற்றும் தீவக முன்னேற்றக் கழக தலைவர் பிரகலாதன் ஆகியோரால் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்விவேந்தல் நடைபெற்றது.
இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும் படுகொலைசெய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்று
இதன்போது மகன இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது. இதில் தனது மகன் இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர் ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாகினார்.

அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான் சாட்சி. அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.
அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு. இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க தெரிவித்தார்.






நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11