முதல் பெண் மாவீரர் மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு (Photos)
புதிய இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீர மரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 36 வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10.10.2023) மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி மலர்தூவி அகவணக்கத்தோடு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை 'நாங்கள் விடுதலைப் போராட்டத்தில் எம்மை ஈடுபடுத்தி தற்போது ஜனநாயக வழியில் அரசியல் களத்தில் நிற்கின்றோம். எமக்காக உயிர்த்தியாகம் செய்த உறவுகளையும், முன்னாள் போராளிகளையும் நினைத்து அஞ்சலி செலுத்த வேண்டிய கட்டாய கடமை ஜனநாயகப் போராளிகளாகிய எமக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது காலம் எமக்களித்த கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றும் முகமாக
இன்றைய இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்து நடத்துகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி-ருசாத்
இரண்டாம் இணைப்பு
அடம்பனில் தமிழ் ஈழப்போர் வரலாற்றில் முதல் பெண் போராளி மாலதியின் 36 வது நினைவு நாள்
நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (10.10.2023) மாலை 6 மணியளவில் அடம்பனில் உள்ள அவரது இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வில் மாலதியின் பெற்றோர்கள், உறவினர்கள்
இணைந்து மாலதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி
செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா எப்பொழுதும் கரிசனையோடு செயல்பட வேண்டும்
என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
முதல் பெண் மாவீரர் 02ம் லெப்டின்ன் மாலதியின் 36 வது ஆண்டு வணக்க நிகழ்வு இன்று(10.10.2023) கிளிநொச்சி தருமபுரத்தில் இலங்கை தமிழரசு கட்சியினுடைய ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நினைவு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் மேலும் உரையாற்றுகையில்,
கிளிநொச்சி
கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவத்துடன் போராடி மாலதி அவர்கள் வீரச்சாவை தழுவிக் கொண்டார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு போர் தொடுத்தது பல அழிவுகளை ஏற்படுத்தியது ஆனாலும் இன்றும் எங்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் என்பதில் நாங்கள் இந்தியாவை வேண்டி நிற்கின்றோம் நாங்கள் கியூபாவையோ அல்லது ரஷ்யாவையோ சீனாவிடமோ தீர்வு பற்றி பேசவில்லை.
இந்தியாவினுடைய இந்தியாவினால் தான் எங்களுடைய தீர்வு பற்றி பேசமுடியும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் தொடர்ந்தும் இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி- யது
முல்லைத்தீவில் அனுஷ்டிப்பு
முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் இன்றையதினம் (10.10.2023) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மலர் தூவி அஞ்சலி
இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் சகீலா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர் க.தவராசா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கெங்காதரன், சமூக செயற்பாட்டாளர்களான ஜூட்சன், பீற்றர் இளஞ்செழியன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |















Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
