காட்டு யானை - மனித மோதல்: 36 பேர் பலி; 144 யானைகள் மரணம்!
காட்டு யானைகள் மற்றும் மனித மோதல் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 காட்டு யானைகள் பலியாகியுள்ளது என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் காட்டு யானைகளின் உயிரிழப்புகள்
சற்று அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (27.04.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனித செயற்பாடுகள்
மேலும், இவ்வருட ஆரம்பம் முதல் கடந்த 25ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 144 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
துப்பாக்கிப் பிரயோகம், மின்சாரம் பாய்ச்சுதல், வெடிமருந்து வைத்தல் போன்ற மனித செயற்பாடுகளால் மாத்திரம் 67 யானைகள் உயிரிழந்துள்ளன.
மனித செயற்பாடுகளால் காட்டு யானைகள் உயிரிழக்கும் வீதம் 2022ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 4 வீதத்தால் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள் உயிரிழப்பு
கடந்த 4 மாதங்களில் அதிகப்படியாக 34 காட்டு யானைகள் அனுராதபுரம் மாவட்டத்திலேயே உயிரிழந்துள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் 29 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 19 யானைகள் உயிரிழந்துள்ளன.
இதேவேளை, இந்த வருடம் யானை - மனித மோதல் காரணமாக இதுவரையில் 36 பேர்
உயிரிழந்துள்ளனர் என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 1 நாள் முன்
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)