காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் சொத்துகள் சேதம் : மக்கள் கவலை (video)
திருகோணமலை பகுதியிலுள்ள கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து வீடுகளை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிரெண்டாம் கட்டை பகுதியில் இன்றைய தினம் (23.04.2023) நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் காட்டு யானைகள், நெல் மூட்டைகளை இழுத்துச்சென்று சேதப்படுத்தியுள்ளது.
பொது மக்கள் விசனம்
அத்துடன், இரவு வேளைகளில் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலையும் உள்ளது என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அதனை உடைத்தெறிந்து உள்ளதாகவும் , நாளாந்தம் யானைகளினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய காட்டு யானையினால் எமது வீடு சேதமடைந்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
