நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காலப் பகுதியில் 60 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அதிக எண்ணிக்கையிலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களில் இடம்பெற்றவையாகும்.
எவ்வாறாயினும், சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு தனிப்பட்ட தகராறுகளும் காரணமாக இருந்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு மற்றும் காயமடைதல் சம்பவங்கள் தவிர, ஆறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் எந்தவித உயிரிழப்புகளும் அல்லது காயங்களும் இல்லாமல் பதிவாகியுள்ளன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்