மலையக மக்கள் முன்னணியின் 35ஆவது பேராளர் மாநாடு
மலையக மக்கள் முன்னணியின் 35ஆவது பேராளர் மாநாடும் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரன் தபால் முத்திரையும் வெளியீடும் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கௌரவிப்பு
ஹட்டன் DKw மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 400 மலையக தொழிலாளர் முன்னணியின் தோட்டத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகனேசன், வேலுகுமார், ஹர்ஷ டி சில்வா, இம்ரான் மஹ்ரூப், இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் ஆதீரா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள். கட்சி தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி - பிரசாந்த்