இலங்கைக்கு பொட்டாசியம் குளோரைட் உரம் வழங்கியுள்ள ரஷ்யா
உலக உணவு திட்டத்தின் கீழ் ரஷ்யா(Russia), இலங்கைக்கு(Sri lanka) 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால், கொழும்பு துறைமுகத்தில் வைத்து இலங்கையின் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.
ரஷ்யாவின் Uralchem குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் உரமானது, இலங்கையின் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்டுள்ளது என கொழும்பில் உள்ள Russia தெரிவித்துள்ளது.
ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக நேற்றைய தினம் கையளிக்கப்பட்ட 55000மெற்றிக்தொன் MOP உரம் (எம், ஓ.பி உரம்) கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று குறித்த உரம் கொண்டு வரப்பட்டது.
உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 29 நிமிடங்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
