பொலிஸாரின் பாவனைக்காக 350 புதிய வீடுகள் கொள்வனவு
மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் மற்றும் இளநிலை அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து 350 வீடுகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
கொழும்பு 13, சிரில் சி. பெரேரா மாவத்தையில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹார்பர் வியூ ரெசிடென்சிஸ் வீட்டுத் திட்டம் அமைந்துள்ளது.
குறித்த வீடமைப்புத் தொகுதியில் இருந்து பொலிசாருக்கு 350 வீடுகளை வாங்குவதற்கான முன்மொழிவு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அதன்படி, இலங்கை பொலிஸ் திணைக்களம் சம்பந்தப்பட்ட 350 வீடுகளை வாங்குவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று (09) பத்தரமுல்ல, சுஹுருபாயவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சி0ல் கையெழுத்திட்டது.

இலங்கை பொலிஸ் திணைக்களம் சார்பாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.ஜி. ஹேமச்சந்திர ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபையின் சார்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் எம்.எச்.வி.ஆர். குமார், சட்ட பணிப்பாளர் டி.எம். கிரிவத்துடுவ, சட்ட அதிகாரி ஹசித் சுபசிங்க மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.