பாடசாலையில் திடீர் சுகயீனமடைந்த 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
வட்டவளையில் உள்ள பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள், உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பஸ்டோவ் தோட்டப் பாடசாலையில் இன்று (17) காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னரே மாணவர்களுக்கு இவ்வாறு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம்
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸாரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்




