மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தி : மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி முன்னிலை
மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்திளை பெற்றுள்ளதாகவும் அவற்றுள் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் முன்னிலை வகிப்பதாகவும் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நடைபெற்ற 2022 - 2023 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயத்தில் உள்ள 43 பாடசாலைகளில் இருந்து 1275 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் இவ்வாறு 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
புனித சவேரியார் பெண்கள் கல்லூரி
அதனடிப்படையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் 13 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 04 மாணவர்களும், சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் 04 மாணவர்களும், வங்காலை சென் ஆனால் கல்லூரியில் 04 மாணவர்களும், முருங்கன் மத்திய கல்லூரியில் 03 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் 02 மாணவர்களும் , அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, எருக்கலம் பிட்டி மகளிர் பாடசாலை, பேசாலை சென்.பற்றிமா மகா வித்தியாலயம் , மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் நானாட்டான் சிவராஜா இந்து பாடசாலை ஆகியவற்றில் தலா ஒரு மாணவர்களும், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |