நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! 17 பேர் உயிரிழப்பு
நாட்டின் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தகவல்கள் பொலிஸ் தலைமையகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி பொரலஸ்கமுவயில் 74 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து கொஸ்கொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு முயற்சியும் சமீபத்திய சம்பவங்களாக பதிவாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
கடந்த சில மாதங்களில் பதிவான பல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளுடன் தொடர்புடையதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது.