டித்வாவினால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் - சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
டித்வா சூறாவளியினால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த முதற்கட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய மலைநாட்டின் இயற்கை காடுகளில் 34% சதவீதம் இந்தச் சூறாவளியால் சேதமடைந்துள்ளன குறிப்பாக மினிப்பே, கொத்மலை, அரநாயக்க மற்றும் பதுளை, மாத்தளை மாவட்டங்களில் உள்ள காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஈர வலயத்தில் அத்தனகலு ஓயா, களனி கங்கை, களு கங்கை மற்றும் உலர் வலயத்தில் மல்வத்து ஓயா, மகாவலி கங்கை, மீ ஓயா, கலா ஓயா ஆகிய ஆற்றுப் படுக்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் சேதமடைந்துள்ளன.
பாதிப்பிற்கு உள்ளான கடலோரப் பகுதிகள்
பருத்தித்துறை (Point Pedro), வலிகாமம் வடக்கு, கல்முனை, நிந்தவூர் மற்றும் கிண்ணியா ஆகிய கடலோரப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. முத்துப்பந்தியா மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பகுதிகளில் உள்ள சதுப்புநிலங்கள் (Mangroves) சேதமடைந்துள்ளன.

முன்னதாக, சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழு, இரண்டு வாரங்களுக்குள் இந்த முதற்கட்ட அறிக்கையை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், முழுமையான விரிவான அறிக்கை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெதி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam