யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் : அநுரவிடம் சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர்
யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (31) நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி விபத்துக்களை குறைக்க..
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன.
எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.
யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன.
யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன. எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
