சர்ச்சைக்குரிய மதபோதகரின் சிறை அறையில் பெருந்தொகை தொலைபேசி, சிம் அட்டைகள் மீட்பு
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையின் 'G' மற்றும் 'H' அறைகளில் 33 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 35 சிம் அட்டைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, அண்மையில் இருந்து மெகசின் சிறைச்சாலையின் 'G' அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கைத்தொலைபேசிகள்
இந்த நிலையில் நேற்று இரவு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக உரிய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
