வளர்ப்பு மகனை கொலை செய்த தம்பதிக்கு பிரித்தானிய நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு
காப்பீடு பணத்துக்காக வளர்ப்பு மகனை கொலை செய்தமை மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக இந்திய தம்பதிக்கு லண்டன் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த லண்டன் வாழ் தம்பதியரான கவல்ஜித் மற்றும் ஆர்த்தி என்பவர்கள் 2015 ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த ஏழை சிறுவனை தத்தெடுத்துள்ளனர்.
இதனையடுத்து தங்கள் மகனை யாரோ கடத்தி சென்று விட்டதாக அவர்கள் அளித்த புகாரின்பேரில் பொலிஸார் விசாரணை நடத்தியபோது காப்பீடு பணத்துக்காக அந்த தம்பதியரே சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்
குறித்த வழக்கில் குஜராத் பொலிஸாரால் குறித்த தம்பதியினர் தேடப்பட்டு வந்தனர். பின்னர் இருவரும் பிரித்தானியாவிற்கு தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் லண்டன் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து பிரிவில் பணியாற்றியுள்ள அனுபவத்தை வைத்து அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தியபோது அந்த தம்பதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri