இலங்கை கடற்படையின் தீவிர கண்காணிப்பு : 33 இந்தியர்கள் கைது
மன்னாருக்கு (Mannar) வடக்கே உள்ள கடல் பகுதியில் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, இலங்கை கடற்படை மற்றும் கடலோர பொலிஸார், சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 33 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது, 03 இந்திய கடற்றொழில் படகுகளும் பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு கடற்றொழில் படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளைத் தடுக்க, இலங்கை கடல் எல்லையில் கடற்படை மற்றும் கடலோர பொலிஸார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்காணிப்பு நடவடிக்கை
இந்த நடைமுறைகள் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அடிப்படையாக கொண்டும் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், நேற்று (25) இரவு மற்றும் இன்று (26) அதிகாலையில் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் படகுகளை வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கடலோர பொலிஸார் தங்கள் விரைவுத் தாக்குதல் படகையும், வட மத்திய கடற்படை கட்டளையின் கரையோர ரோந்து படகையும் அனுப்பி தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்றொழில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்றொழில் படகுகளை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் விளைவாக 03 இந்திய கடற்றொழில் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இலங்கை கடல் எல்லையில் தொடர்ந்து தங்கியிருந்த 33 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (03) மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் (33) இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |