யாழில் இரண்டு மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை!
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (08.08.2023) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் புகைப்பழக்கம்
குறிப்பாக கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும், 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர்.
அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan