கடும் தீவிரமடைந்துள்ள உக்ரைன் - ரஷ்ய போர்! - இலங்கையர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
உக்ரைனில் ரஷ்யா தனது முழு அளவிலான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு வன்முறை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நான்கு எல்லை நாடுகளின் வழியாக மொத்தம் 32 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு இதனை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நெருக்கடியை அடுத்து பெலாரஸில் உயர்கல்வியில் ஈடுபட்டுள்ள இலங்கை மாணவர்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இதுவரை 800,000க்கும் அதிகமான பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்து வருவதால், நான்கு மில்லியன் மக்கள் எல்லையை கடக்க முயற்சி செய்யலாம் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது.
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள போலாந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, மால்டோவா போன்ற நாடுகளுக்கு அகதிகள் வெளியேறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்கதக்து.