தீவிரமடையும் போர்களம்! உக்ரைன் வெளியிட்ட தகவல்: மறுக்கும் ரஷ்ய தரப்பு
உக்ரைன்-ரஷ்ய போரில்,ரஷ்ய தரப்பினரின் இழப்பு தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் பாதுகாப்பு சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த ஆக்கிரமிப்பு போரில் இதுவரை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தரப்பு மறுப்பு
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி போர் ஆரம்பமான தினத்தில் இருந்து இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வாரத்தில் மாத்திரம் 700க்கும் அதிகமான ரஷ்ய படையினர் போரில் கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 3 ஆயிரத்து 220 தாங்கிகள், 6 ஆயிரத்து 405 கவச வாகனங்கள் மற்றும் 2 ஆயிரத்து 226 பீரங்கிகளையும் இந்த போரில் ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இந்த தரவுகளை ரஷ்ய தரப்பினர் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.