கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்ட 3004 பேர் கைது
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்ட 3004 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனை முன்னைய ஆண்டுகளை விட 2025ஆம் ஆண்டு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வழக்குகள் பதிவு
கடந்த 2025ஆம் ஆண்டில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் 3041 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 3004 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை விட அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் மதுபானத்தை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 21 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட பொலிஸ் பிரிவு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan