தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச கூப்பன்கள்
பிரிவெனா பாடசாலைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்வதற்கான 3000 ரூபா பெறுமதியான கூப்பன்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளை வழங்கும் திட்டத்தை கல்வி அமைச்சகம் செயல்படுத்தி வருகின்றது.
அதே நேரத்தில் 2020 - 2023 முதல் பிரிவென் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் குறிப்பிட்ட தொகையிலான மாணவர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இலவச காலணிகள்...
அதன்படி, தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், மாணவ துறவிகள் மற்றும் பிரிவென் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான ரூ.3000/- மதிப்புள்ள பரிசு கூப்பன்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்வைத்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
அந்தவகையில், 2025ஆம் ஆண்டுக்கான இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கான காலணி திட்டம் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது,
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 6,000 பாடசாலைகளில் படிக்கும் 650,000 மாணவர்கள்
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலை வகையைச் சேராத நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள 140,000 மாணவர்கள்.
சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களைக் கொண்ட 28 பாடசாலைகளில் உள்ள 2,300 மாணவர்கள்.
தெரிவு செய்யப்பட்ட 30,000 மாணவ துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்கள்.
யாருமே நெருங்க முடியாத ஈரானின் நிலக்கீழ் தளங்கள்: தகர்க்க விரும்பும் அமெரிக்காவின் அதிரடித் திட்டங்கள்!!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |