கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 3000 சிறுவர்கள் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பின்மை
பொருட்களின் விலை ஏற்றம், தொழில் வாய்ப்பின்மை, வறுமை, உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த சிறுவர்கள் போசாக்கு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 2765 க்கு மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இவ்வாறு போசாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1288 சிறுவர்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 884 சிறுவர்களும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 393 சிறுவர்களும் இவ்வாறு போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
