சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட மக்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய வசதிகள் வழங்கல்
இதேவேளை இலங்கையர்களிற்கு தங்குமிடம், உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இலங்கையர்களை சென்று பார்த்ததுடன் அவர்களிற்கு உதவுவதற்கு வியட்நாம் அரசாங்கமும் அதிகாரிகளும் அனைத்தையும் செய்வார்கள் என உறுதியளித்தார்.
இலங்கையர்கள் தாங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



