வடக்கு - கிழக்கில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு - செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும், நேற்று (09) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் தலைமையில், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பனை சார் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பிரதி அமைச்சரினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு, திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் 'கற்பகம்' என்ற பெயரில் பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் பெறுமதி வாய்ந்த பனை உற்பத்தி பொருட்களுக்கான உபகரணங்களும் பிரதி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணன், பிரதி அமைச்சர்களின் செயலாளர்கள், பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam