இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள பெருமளவான வெளிநாட்டவர்கள்
இவ்வாண்டின் முதல் இரண்டு வாரங்களில் சுமார் 30,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.
அவர்களில் பெருமளவானோர் ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த இருவருடங்களாக சர்வதேச நாடுகள் அனைத்தும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், எமது நாடும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக நாட்டிற்குப் பெருமளவான அந்நியச்செலாவணியை ஈட்டித்தருகின்ற சுற்றுலாத்துறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவாக அந்நியச்செலாவணி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டதுடன் சுற்றுலாத்துறைசார் தொழில் முயற்சியாளர்களும் தாக்கங்களை எதிர்கொண்டனர்.
நாட்டில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளின் சராசரி எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னர் சுற்றுலாப்பயணிகள் சராசரியாக 4 - 5 நாட்கள் வரை நாட்டில் தங்கியிருப்பது வழமையாகும். இருப்பினும் இப்போது அவர்கள் 10 - 14 நாட்கள் வரை நாட்டில் தங்கியிருக்கின்றனர்.
சுற்றுலாப்பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதற்கான முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் இதில் பங்களிப்புச்செய்துள்ளன' என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த 10 நாட்களில் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் இன்னமும் நாட்டைவிட்டுச் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
