வடக்கிற்கு அனுப்பப்பட்ட தரமற்ற சீனி: அமைச்சர் டக்ளஸ் எடுத்த உடனடி நடவடிக்கை
வட மாகாணத்திற்கு 80 ஆயிரம் கிலோகிராம் சீனி கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட நிலையில் 30 ஆயிரம் கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சீனியின் விலை அதிகரித்தமையடுத்து 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண மக்களுக்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்கப்படும் என கடற்தொழில் அமைச்சருக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.
திருப்பி அனுப்பப்பட்டுள்ள சீனி
இந்த நிலையில் கிடைக்கும் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் சீனியின் தரம் பார்வையிடப்பட்ட பின்னர் வருடத்திற்கு குறித்த நிறுவனத்தால் 80 ஆயிரம் கிலோகிராம் சீனி அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் தரமற்ற சீனியாக அடையாளம் காணப்பட்ட 30 ஆயிரம் கிலோ கிராம் சீனி அந்த நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியபோது, பொதுமக்களிற்கு தரமான பொருட்கள் மாத்திரமே வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கத்தினர் தரமற்ற சீனியை திருப்பி அனுப்பியது நல்ல விடயமாகும். இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேசப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட சீனிக்கு பதிலாக தரமான சீனி வழங்கப்படும். தரமற்ற பொருட்களை அனுப்பும் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது. மக்களுக்கு தரமான சீனி கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்துகிறேன். மேலும் ஒரு தொகை சீனி பெற்றுக் கொள்வது தொடர்பிலும் பேசி வருகிறேன். மக்களின் நலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்ட கூட்டுறவு சங்கத்தினரை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri