குளவிக் கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் திடீரென குளவிக் கொட்டுக்கு இலக்காகி, 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை நேரத்தில் எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள் உடனடியாகப் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மூவரின் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேல் அதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

