இலங்கை பொலிஸாரின் அடக்குமுறை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்
போராட்டங்களை வன்முறையால் ஒடுக்கும் இலங்கையின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான (South Asia) இயக்குநர் ஸ்மிருதி சிங் (Smriti Singh) கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியி்ட்டுள்ள 'எந்த எதிர்ப்பையும் அடக்கத் தயார்' என்ற வகையிலான புதிய ஆய்வு அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், " கடந்த 2022 மார்ச் மற்றும் 2023 ஜூன் வரை, இலங்கையில் சுமார் 30 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை
பொலிஸாரின் நடவடிக்கை
இவற்றின் போது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு குறித்து இந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை மற்றும் தடியடிகளை தவறாகப் பயன்படுத்திய இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தொடர்பில், குறைந்தது 17 போராட்டங்களின் காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் நடத்தைகளை சர்வதேசத்துடன் ஒப்பிடுகையில் அவை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை.
இலங்கை பொலிஸார் 2022 - 23ஆம் ஆண்டுகளில் இருந்தே, போராட்டங்களை சட்டவிரோதமானவை மற்றும் வன்முறையானவை என்றும், அவற்றை அடக்குவதற்கு பலத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கருதி செயற்பட்டு வருகின்றனர்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதையும், போராட்டங்களை எளிதாக்குவதும் பாதுகாப்பதும் அதிகாரிகளின் கடமை என்பதையும் பொலிஸார் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.மேலும், அவர்கள் பெரும்பாலும் அமைதியான எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து, துரத்தினார்கள், அடித்தார்கள்.
சர்வதேச மன்னிப்பு சபை
இந்தநிலையில், 2022 காலிமுகத்திடல் போராட்டம் முதல் இன்றுவரை தொடரும் பெரும்பாலான அமைதியான போராட்டங்களுக்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பாக சக்தியை, பொலிஸார் பயன்படுத்துவதை சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணப்படுத்தியுள்ளது.
அது மாத்திரமன்றி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அமைதியான போராட்டங்களுக்கு பாதுகாப்பு படையினரும், புலனாய்வு அமைப்புகளும் கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் இடையூறுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.
சர்வதேச மன்னிப்புச் சபை தனது விசாரணையின் போது, கொழும்பு, பத்தரமுல்ல, களனி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய இடங்களில் இருந்து 30 போராட்டங்களின் 95 சரிபார்க்கப்பட்ட காணொளிகளில் 39 தொடர்பில் திறந்த மூல விசாரணையையும் நடத்தியது.
இதனையடுத்து மார்ச் 2024 இல், சர்வதேச மன்னிப்புச் சபை, இந்த குற்றச்சாட்டுகளை கோடிட்டுக் காட்டி உத்தியோகபூர்வ பதிலைக் கோரி இலங்கை பொலிஸாருக்கு கடிதம் எழுதியது, ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் மன்னிப்பு சபை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |