இசை நிகழ்வுக்கு 30 சதவீத வரி விலக்கே வழங்க முடியும்! யாழ். மாநகரசபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்ட விடயம்

Jaffna University of Jaffna
By Rakesh Jul 17, 2025 07:40 AM GMT
Report

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்துக்கான பேருந்து கொள்வனவுக்கு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு முழுமையான வரி விலக்கு கோரிய நிலையில் 30 சதவீத வரி விலக்கே வழங்க முடியும் என யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

திணறும் இராணுவ புலனாய்வு! பிள்ளையானுடன் சிக்கப் போகும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே

திணறும் இராணுவ புலனாய்வு! பிள்ளையானுடன் சிக்கப் போகும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே

முழுமையான வரிவிலக்கு கோரிக்கை

இதன்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான பேருந்து கொள்வனவுக்காக யாழ்ப்பாணம் திருவள்ளூவர் பண்பாட்டு மையத்தில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சிக்கு முழுமையான வரிவிலக்கு கோரிக்கை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தால் யாழ். மாநகர சபையிடம் முன்வைக்கப்பட்டது.

இதன்போது 25 சதவீத வரிச்சலுகை வழங்குவது என மாநகர சபை நிதிக் குழுவில் தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் சபையில் அனுமதிக்காக விவாதிக்கப்பட்டது.

singing compitition

இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த இசை நிகழ்ச்சி மருத்துவ பீட மாணவர்களின் வாகனக் கொள்வனவுக்காக இடம்பெறுவதால் இதற்கு 50 சதவீத வரி விலக்கு கொடுக்கலாம் என்ற யோசனை யாழ். மாநகர மேயரால் முன்வைக்கப்பட்டது.

50 சதவீத வரி விலக்கு

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் உறுப்பினர் ப.தர்சானந் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த இசை நிகழ்ச்சிக்கு 50 சதவீத வரி விலக்கு வழங்கத் தேவையில்லை. இசை நிகழ்ச்சிக்கான ஆரம்பக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாவில் இருந்து உள்ளது.

சைக்கிள் கட்சி உறுப்பினருக்கு யாழ்.மேயர் கடும் எச்சரிக்கை

சைக்கிள் கட்சி உறுப்பினருக்கு யாழ்.மேயர் கடும் எச்சரிக்கை

யாழ். மாநகர சபைக்கான கோரிக்கைக் கடிதத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சிகளைப் பெறுவதற்கான போக்குவரத்துக்காக பேருந்து கொள்வனவு எனக் கூறினார்கள். ஆனால், மருத்துவ பீட மாணவர்கள் ஒரு ஊடக சந்திப்பில் பேருந்து தங்கள் விரிவுரைகளுக்கும் பயன்படுத்தப்படும் எனக் கூறுகின்றார்கள். எனவே, 25 சதவீத வரி விலக்கை வழங்குவது சரியாக இருக்கும்." - என்றார்.

சில உறுப்பினர்கள் மாணவர்களுக்கு 50 சதவீத வரி விலக்கை வழங்கலாம் எனவும், 50 சதவீதமான வரி விலக்கை வழங்கக்கூடாது எனவும் தங்கள் விவாதங்களை முன்வைத்தார்கள்.

இதன்பின்னர் உறுப்பினர் சு.கபிலன் கருத்துத் தெரிவிக்கையில், "இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் இந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களின் செலவுகள் குறைக்கப்பட்டு சமூக நலனாக மாத்திரம் நிகழ்ச்சி இடம்பெறுகின்றதா என்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்குத் தேவையான மேலதிகமான வரிச் சலுகைகளை வழங்கலாம்." என்றார்.

jaffna municipal council

நீண்ட விவாதம்

பின்னர் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு 30 சதவீத வரி விலக்கு வழங்குவது என நீண்ட விவாதங்களின் பின் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்றுக்கு 50 சதவீத வரி விலக்கு வழங்குவதாக நிதிக் குழுவில் தீர்மானித்த நிலையில் சபை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

மருத்துவ பீட மாணவர்களின் இசை நிகழ்ச்சிக்கு 30 சதவீத ஒதுக்கீட்டை வழங்கிவிட்டு உள்ளூர் திரைப்படத்துக்கு 50 சதவீத வரிவிலக்கு வழங்குவதா என உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. எனினும், அந்த உள்ளூர் திரைப்படத்தின் 50 சதவீத வரி விலக்கு அண்ணளவாக 12 ஆயிரம் ரூபா எனவும், ஆனால் மருத்துவ பீட மாணவர்களின் இசை நிகழ்ச்சிக்கு 50 சதவீத வரி ஒதுக்கீடு மூன்று இலட்சம் வரை செல்லலாம் எனவும் கூறப்பட்டது.

கெரி ஆனந்த சங்கரி மீது பூரண நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

கெரி ஆனந்த சங்கரி மீது பூரண நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அந்தத் திரைப்படத்துக்கு 50 சதவீத விலைக்கழிவை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து திரைப்படங்களுக்கு வரிச் சலுகை வழங்கினால் சபையில் வருமான இழப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் களியாட்ட நிழ்வுகளுக்கு வரிச் சலுகை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பது எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, சிட்னி, Australia

02 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US