30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் - வாசுதேவ நாணயக்கார தகவல்
உத்தேச மின்சார கட்டண திருத்தங்களினால் 30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நுகர்வோர் 100 வீத அதிகரிப்பை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

மின் கட்டணத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் யூனிட் ஒன்றின் விலை 2.50 ரூபாவில் இருந்து 6 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் கட்டணங்களை செலுத்த முடியாததால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான இலங்கையர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்கள் என்பதால் மக்களின் வருமானம் செலவுகளை ஈடுகட்ட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாணயக்கார தெரிவித்தார்.
விலை இரட்டிப்பாகும் போது உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நபர்கள் எவ்வாறு மின்சார கட்டணத்தை செலுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri