இலங்கைக்கு சீனா வழங்கிய 30 மில்லியன் நிவாரண நிதி
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவசரகால மனிதாபிமான நிவாரண நிதியாக 30 மில்லியன் ரூபாய்களை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங் இதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
இந்தநிலையில், சீன அரசாங்கமும் மக்களும் இலங்கை மக்களுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
சீனத் தூதரகம்
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ், இலங்கை அரசாங்கமும் மக்களும் பேரழிவைக் கடக்கவும் சிரமங்களைத் தாண்டிச் செல்லவும் முடியும் என்று சீனா நம்புகிறது என இந்த நிதியுதவியின் பின்னர் சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய கடன்கொடுனர் நாடான சீனா, அவ்வப்போது நிவாரணங்களையும் வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |