நீர்கொழும்பில் 30 வெளிநாட்டவர்கள் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Negombo
By Mayuri Jun 25, 2024 08:56 AM GMT
Report

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வைத்து 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 பேரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

கைப்பற்றப்பட்ட கணினிகள்

கொச்சிக்கடை - பல்லம்சேன மற்றும் பலகதுரே ஆகிய பிரதேசங்களில் உள்ள இரண்டு விருந்தகங்களில் தங்கியிருந்து இந்த நிதி மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நிதி மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட 10 கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வெளிநாட்டு கும்பல் - திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பாரிய மோசடி

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வெளிநாட்டு கும்பல் - திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பாரிய மோசடி

  

நீர்கொழும்பில் 30 வெளிநாட்டவர்கள் கைது | 30 Forieghners Arrest Warning To People

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இதேவேளை சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதால், அது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கையின் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

குறித்த எச்சரிக்கையில், பேஸ்புக், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றின் ஊடாக தகவல்களை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

குறிப்பாக தேசிய மற்றும் மத ரீதியான பண்டிகைக்காலங்களை இலக்கு வைத்து இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன. இதற்காக பிரபலமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய பல வர்த்தக நாமங்கள் போலியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

நீர்கொழும்பில் 30 வெளிநாட்டவர்கள் கைது | 30 Forieghners Arrest Warning To People

களவாடப்படும் தனிப்பட்ட விபரங்கள்

அறியாத நபர்களிடமிருந்து வருகின்ற குறுஞ்செய்திகளில் இருக்கின்ற லின்க்களை மக்கள் க்ளிக் செய்வதன் மூலம், இணைய மோசடிக்காரர்கள் பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைக் களவாடுகின்றனர்.

அவற்றைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபடுவதுடன், சில தரப்பினர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றிருப்பதாக அல்லது அன்பளிப்புகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகக் கூறி, அவற்றைப் பெற்றுக் கொள்ள ஒருதொகை பணத்தை வைப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியும் நிதி மோசடி செய்கின்றனர்.

அறியாத நபர்களிடமிருந்து கிடைக்கின்ற இவ்வாறான குறுஞ்செய்திகளை திறப்பதற்கு முன்னர், அவர்கள் குறிப்பிடுகின்ற நிறுவனங்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்குச் சென்றோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ, தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US