மட்டக்களப்பில் 30 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 12 பேர் உட்பட இன்றைய தினம் 30 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 60 உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 12 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பில் 09 பேரும் ,காத்தான்குடியில் 04 பேரும் ,செங்கலடி பகுதியில் ஐந்து பேரும் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை,மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இதேநேரம் கல்லடி பகுதியில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நிலை அதிகளவில் காணப்படுவதாகும் .இதன் காரணமாக தொற்று அதிகரிக்கும் நிலையுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri