ஆறு மாதங்களுக்குள் புதிய சட்டம் - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு
புதிய மருத்துவ சட்டமூலத்தை 06 மாதங்களுக்குள் தொகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நல்ல சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
இதேவேளை, அடுத்த 03 மாதங்களுக்கான அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 30 பில்லியன் ரூபாவை மேலதிகமாக மருத்துவப் பொருட்களுக்காக ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
